» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் போலீசார் குவிப்பு: கைது செய்யப்பட வாய்ப்பு?
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:35:57 AM (IST)
பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவலையடுத்து, அவரது நீலாங்கரை இல்லத்தின் முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துத் தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஜூலை மாதத்தில் 42 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும், ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை. இதுபற்றி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார்" எனப் பேசினார்.
அப்போது கூட்டத்திலிருந்தவர்கள் எழுப்பிய கோஷத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், கீர்த்தனா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் வெளியிட்டுள்ள பதிவில்: "பொதுவாழ்வில் உள்ளவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் சூழலில், அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற செய்தி பரவியதையடுத்து, அவரது நீலாங்கரை இல்லத்தின் முன்பு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படும் பட்சத்தில், மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்குத் தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்ளது. மேலும், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திலும் த.வெ.க. மகளிர் அணியினர் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)


