» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாரம் 5 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 7:46:41 AM (IST)

BankArpattam4i.jpg

வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நேரத்தை உடனடியாக அமல்படுத்தி அறிவிக்கக் கோரி, அகில இந்திய வங்கி பணியாளர் சங்க கூட்டமைப்பின் (UFBU) சார்பில் தூத்துக்குடியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி பீச் ரோடில் உள்ள 381 வங்கி வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, UFBU தூத்துக்குடி வங்கி தொழிற்சங்க நிர்வாகி திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி  செந்தில்குமரன் வரவேற்புரையாற்றினார். 

இப்போராட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், துரைராஜ், மைக்கேல் ஞானராஜ் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தொழிற்சங்க நிர்வாகி சன்னாசி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினர். 

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன் மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, வாரத்தில் 5 நாட்கள் பணியை உடனடியாக அரசு மற்றும் வங்கி நிர்வாகம் பிரகடனப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். 


மக்கள் கருத்து

உழைக்கும் கோமாளிAug 13, 2026 - 09:33:31 AM | Posted IP 172.7*****

நீங்க எல்லாரும் வாரத்தில் 5 நாட்கள் போனால் போதுமே, மற்ற நாட்களில் விடுமுறை எடுத்து வீட்டில் இருக்கலாமே, ஊர் சுற்றலாமே பின்ன எதுக்கு போராட்டம்??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory