» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:15:29 PM (IST)

தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கோபுரம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித நல் ஆலோசனை மாதா ஆலயத்தில் புதிதாகக் கோபுரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகச் சாரம் அமைக்கப்பட்டு, இன்று மதியம் 12.30 மணி அளவில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென புதிதாகப் போடப்பட்ட கான்கிரீட் தளம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கான்கிரீட் இடிந்து விழுந்ததில், மேலே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டு இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த 4 தொழிலாளர்களையும் உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிடம் சரிந்து விழுந்ததில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால், கான்கிரீட் இடிபாடுகளுக்குள் வேறு ஏதேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என கண்டறிய கான்கிரீட் கலவைகளை அகற்றும் பணியில் ஊழியர்களும் தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 50 மாணவிகளுக்குச் சிலம்பப் பயிற்சி : சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பிரதாப் பாராட்டு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:47:40 PM (IST)

முறையான நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: குமரி மாவட்ட காவல்துறை அதிரடி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:57:15 AM (IST)

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படிப் பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல்குமார் பேச்சை நீக்கிய சபாநாயகர்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 11:27:51 AM (IST)

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் மீது 6 பிரிவுகளில் வழக்கு : காவல்துறை விளக்கம்
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:33:26 AM (IST)

கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்: உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:40:55 PM (IST)

ஆன்மா அமைப்பின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா : ரூ.1.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:16:08 PM (IST)


