» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசியக் கொடியேற்றியபோது பலியான கணவர் : நஷ்டஈடு கோரி மூதாட்டி 50 ஆண்டுகால போராட்டம்!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:49:47 PM (IST)



கடந்த 1972-ஆம் ஆண்டு பணிநேரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரின் மனைவி, தனது கணவரின் இறப்பிற்கு நஷ்டஈடும் பென்ஷனும் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி உச்சினாளி என்பவர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "என் கணவர் குப்புசாமி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று, ஊராட்சி ஒன்றியத்தின் முன்பு தேசியக் கொடியேற்றுவதற்காகக் கொடிக்கம்பம் நட்டியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பணிநேரத்திலேயே அகால மரணமடைந்தார்.

கணவர் இறந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை அரசு தரப்பில் எவ்வித நஷ்டஈடோ அல்லது அவரது பணிக்கான பென்ஷன் தொகையோ வழங்கப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளாகப் பல்வேறு அரசுத் துறைகளுக்கும் அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பியும் எந்தவிதப் பதிலும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் கடும் மனச்சோர்வில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஆதரவற்ற ஏழை விதவையான தனக்குக் கருணை உள்ளத்தோடு கணவரின் உயிரிழப்பிற்கான உரிய நஷ்டஈட்டையும், பென்ஷனையும் வழங்கிட உத்தவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory