» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

LHBTiruchendur.jpg

திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 20 முதல் அதிநவீன LHB பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 20 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும். திருச்செந்தூரில் இருந்து வரும் அக்டோபர் 21 முதல் LHB பெட்டிகளுடன் இயங்கும்.

LHB (Linke-Hofmann-Busch) என்பது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ரயில் பெட்டியாகும். பழைய ஐ.சி.எஃப் (ICF) பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் இவை பல்வேறு மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன. விபத்து நேரங்களில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று ஏறாத சிறப்பு வடிவமைப்பு.

அதிக வேகத்தில் செல்லும்போது ரயில் பெட்டியின் நிலைத்தன்மை (Stability) சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது சத்தம் மற்றும் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும் என்பதால் பயணிகள் சொகுசான பயண அனுபவத்தைப் பெற முடியும். செந்தூர் எக்ஸ்பிரஸ் LHB பெட்டிகளாக மாற்றப்படுவது தென் மாவட்ட மற்றும் ஆன்மீகப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory