» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:53:26 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் பகுதியில் கட்டப்பட்டு வரும் தோழி விடுதி கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டுகொண்டார்.
பின்னர் அவர தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்றோரின் நல்வாழ்விற்காகப் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் சிறப்புறச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் வெளிமாநிலம், வெளிமாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, வந்து பணிபுரியும் மகளிர்களிருக்கு பாதுகாப்பான தங்குமிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களில் "தோழி" விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்ஒருபகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ.5.2 கோடி மதிப்பில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட நாகர்கோயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் "தோழி" பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்புதிய விடுதியானது மொத்தம் இரண்டு தளங்களுடன், 50 படுக்கை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுதியின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்திற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. கட்டுமானப் பணிகளின் தரம், உறுதித்தன்மை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
எஞ்சியுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, விடுதியை விரைவில் மகளிரின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். ஆய்வில் மாவட்ட சமூகநல அலுவலர் காயத்திரி, பொறியாளர்கள் உட்பட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 12:04:38 PM (IST)

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:32:50 PM (IST)

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)


