» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இதுவரை அகற்றாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை அகற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் கடையை இதுவரை அகற்றாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுபானம் அருந்திவிட்டுச் சிலர் வீடுகளின் வாசல்கள் மற்றும் சாலையோரங்களில் படுத்து உறங்குவதால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடனும் மன உளைச்சலுடனும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடையை அகற்றக் கோரி டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டத்தை ஜூலை 23 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட தாசில்தார் 20 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார்.
ஆனால், அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் இதுவரை கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கையும் அதிகாரிகள் அளித்த எழுத்துப்பூர்வமான உறுதியும் ஏன் செயல்படுத்தப்படவில்லை? லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றுவதில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள சில அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டதாகப் பொதுமக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதைச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரித்து, தவறு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கடையை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:07:58 AM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)


