» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் செயல்பட்டு வரும் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி, ஊர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்
பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றிலும் கழிவுமீன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இவற்றிலிருந்து வீசும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நிறுவனங்களை மூட வலியுறுத்தி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாகப் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் தற்போது வரை தொடர்ந்து 825 நாட்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈ. சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொறுப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோனி, சுவாமிநாதன், இராமகிருஷ்ணன், சங்கரலிங்கம் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் பொட்டலூரணி அஞ்சலகப் பெட்டியில் தமிழக முதல்வருக்கு தனித்தனியாகக் கடிதங்களை அஞ்சல் செய்து போராட்டத்தைத் தொடங்கி வைத்தனர்
கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்:
பொட்டலூரணியைச் சுற்றியுள்ள துர்நாற்றம் வீசும் கழிவுமீன் நிறுவனங்களை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஆசிரியர் சங்கரநாராயணன் மீது எடுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பொட்டலூரணி கிராம மக்கள் கோரும் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஏற்கனவே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மதன்ராஜிடமும் நேரில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கடிதப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:36:48 PM (IST)

4 கிலோவாட் மின் இணைப்புக்கு கள ஆய்வு இல்லை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய நடைமுறை!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:07:58 AM (IST)


