» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆதித்தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் கி.குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, கனிமவளக் கடத்தல் தடுப்பு, ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் கனரக வாகனப் போக்குவரத்துக் கட்டுப்பாடு என எஸ்.பி. ஸ்டாலின் தலைமையிலான காவலத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
காவல் நிலையங்களுக்கு வரும் சாதாரண பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தியதும், புகார்களைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் ஒரு நல்ல காவல் நிர்வாகத்தின் அடையாளமாகும்.
எஸ்.பி.யின் நல்ல செயல்பாடுகளைப் பாராட்டிப் பொதுமக்கள் தன்னிச்சையாக வெளியிடும் சமூக வலைதள வீடியோக்களை (Reels) கூடக் குறையாகச் சித்தரிக்கும் மனநலம் பாதித்த அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கரின் செயல் கண்டிக்கத்தக்கது.
கருத்துரிமை என்ற பெயரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் மீது அவதூறு பரப்பும் சவுக்கு சங்கரின் அணுகுமுறை "யோக்கியன் வர்றான் செம்பெடுத்து உள்ள வை" என்ற கதையாகவே உள்ளது.
அதிகாரிகள் மற்றும் காவலர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணப் பலன்களைச் சவுக்கு சங்கர் பெற்றதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்துத் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது உண்மையான குற்றச்சாட்டுகள் இருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்; மாறாக அவதூறு பிரச்சாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் நலனுக்காகப் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளுக்கு ஆதித்தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)

திருச்செந்தூர் ஆவணி திருவிழா: அழைப்பிதழ் படி கொடியேற்றம் நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:55:55 AM (IST)

நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்கள் மீட்புப் பணிகள்: தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 12:04:38 PM (IST)

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)


