» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
வெள்ளி 19, ஜூலை 2024 11:10:01 AM (IST)
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.