» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!
வெள்ளி 26, ஜூலை 2024 5:20:18 PM (IST)

ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியது வங்கதேசம். அந்த அணியில் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ரேனுகா சிங் மற்றும் ராதா யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பூஜா வஸ்த்ரகார் மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தனர். 11 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்மிருதி மந்தனா 55 ரன்களுடனும் (9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஷஃபாலி வர்மா 26 ரன்களுடனும் (2 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அல்லது பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)


