» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் சுமித்துக்கு பிரதமர் வாழ்த்து!

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:00:09 PM (IST)



பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் சுமித்துக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான(எஃப்64) ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் சுமித் அண்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று (செப். 2) நடைபெற்ற போட்டியில், 70.59 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார் 26 வயதான சுமித் அண்தில். இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், சுமித் அண்தில்லை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory