» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி-20' கிரிக்கெட்டில் 10 ரன்னில் சுருண்ட மங்கோலியா!
சனி 7, செப்டம்பர் 2024 12:50:27 PM (IST)

'டி-20' கிரிக்கெட்டில் 10 ரன்னுக்கு சுருண்டது மங்கோலிய அணி.
'டி-20' உலக கோப்பை தொடருக்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்று மங்கோலியாவில் நடந்தது. இதன் 'ஏ' பிரிவு போட்டியில் மங்கோலியா, சிங்கப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சிங்கப்பூர், பீல்டிங் தேர்வு செய்தது. மங்கோலிய அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. முதல் ரன்னை எடுப்பதற்குள் இரு விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 5 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் இருந்து கடைசி வரை மீளவே முடியவில்லை. மங்கோலியா அணி 10 ஓவரில் 10 ரன்னுக்கு (2 உதிரி) சுருண்டது. கன்போல்டு, ஷுரன்ட்செட்செக் அதிகபட்சம் தலா 2 ரன் எடுத்தனர். சிங்கப்பூர் அணியின் 17 வது சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷா பரத்வாஜ், 3 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார்.
பின் களமிறங்கிய சிங்கப்பூர் அணியின் மன்பிரீத் சிங், முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். அடுத்து வந்த பதுயாக், சிக்சர், பவுண்டரி என விளாச, 0.5 ஓவரில் 13/1 ரன் எடுத்தது. 115 பந்து மீதமுள்ள நிலையில், சிங்கப்பூர் அணி 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)

சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)

அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்: ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை ஏன்?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:23:08 PM (IST)

வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி முடிவுக்கு வந்ததா? விமர்சனங்களுக்கு கே.கே.ஆர் பயிற்சியாளர் பதிலடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:00:44 PM (IST)

தோல்வியால் விரக்தி: மைதானத்திலேயே ரிஷப் பண்டை கடிந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:08:34 AM (IST)

