» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : முதலிடத்தில் பும்ரா - ரவீந்திர ஜடேஜா!
புதன் 2, அக்டோபர் 2024 4:52:07 PM (IST)

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களில் பும்ராவும், ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தில் உள்ளனர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் (792 புள்ளி) 2 இடம் உயர்ந்து 3வது இடத்திற்கும், விராட் கோலி (724 புள்ளி) 6 இடம் உயர்ந்து 6வது இடத்திற்கும் வந்துள்ளனர். ரிஷப் பண்ட் (718 புள்ளி) 3 இடம் சரிந்து 9வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (899 புள்ளி), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (829 புள்ளி) உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா (870 புள்ளி) 1 இடம் உயர்ந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதே சமயம் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் (869 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (847 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (468 புள்ளி), ரவிச்சந்திரன் அஸ்வின் (358 புள்ளி) முதல் இரு இடங்களில் உள்ளனர். டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா (124 புள்ளி), இந்தியா (120 புள்ளி), இங்கிலாந்து (108 புள்ளி) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026: அதிரடி ஆட்டத்தில் தடுமாறும் மும்பை - டாடீஸ் ஆர்மி உத்தி தோல்வியா?
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:58:37 PM (IST)

முடிவுக்கு வந்த தோல்விப் பயணம்: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே முதல் வெற்றி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:43:14 AM (IST)

வைபவ் - ஜூரல் அதிரடி பேட்டிங்: ஆர்.சி.பி. அணியை வீழத்தி ராஜஸ்தான் 4-வது தொடர் வெற்றி!
சனி 11, ஏப்ரல் 2026 11:10:54 AM (IST)

கொல்கத்தாவை கதறவிட்ட முகுல் சவுத்ரி: 7 சிக்ஸர்கள் விளாசிய தோனி ரசிகர்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:29:44 PM (IST)

கடைசி பந்தில் நழுவிய வெற்றி: உடைந்த மில்லர்; தேற்றிய அக்ஷர்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

ஜெய்ஸ்வால் - வைபவ் அதிரடி: மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
புதன் 8, ஏப்ரல் 2026 4:43:52 PM (IST)

