» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
திங்கள் 7, அக்டோபர் 2024 11:58:22 AM (IST)

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் நிடா தர் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய அருந்தாதி ரெட்டி 3 விக்கெட் , ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட் வீழ்த்தினார் தொடர்ந்து 106 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது
இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
