» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிக்கந்தர் ராசா சதம் : ஜிம்பாப்வே அணி உலக சாதனை

வியாழன் 24, அக்டோபர் 2024 10:53:22 AM (IST)



சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 344 ரன்கள் குவித்து அதிக ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது. 

கென்யாவின் நைரோபியில் உள்ள ருவாரகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (அக்.23) நடைபெற்ற ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் காம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்தது. தடிவானாஷே 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். பிரையன் 50, கிளைவ் 53, ரியான் 25 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசாவின் ஆட்டம் ஹைலைட்டாக அமைந்தது. 43 பந்துகளில் 133 ரன்களை அவர் ஸ்கோர் செய்தார். 7 ஃபோர்கள் மற்றும் 15 சிக்ஸர்களை அவர் விளாசினார். 33 பந்துகளில் அவர் சதம் விளாசி இருந்தார். ஜிம்பாப்வே அணி 27 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தது. 20 ஓவர்களில் 344 ரன்களை ஜிம்பாப்வே குவித்தது.

345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை காம்பியா விரட்டியது. 14.4 ஓவர்களில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. அந்த அணியில் ஆண்ட்ரே என்ற வீரரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தை 290 ரன்களில் வென்றது ஜிம்பாப்வே. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டிலும் சதம் விளாசிய ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை சிக்கந்தர் ராசா படைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory