» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

எமர்ஜிங் ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன்

திங்கள் 28, அக்டோபர் 2024 12:21:59 PM (IST)



எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் கோப்பையையும் வென்று அசத்தியது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குரூப் Aல் இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் Bல் இந்தியா A, பாகிஸ்தான் A அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

யுஏஇ, ஓமன், வங்காளதேசம், ஹாங்காங் ஆகிய அணிகள் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறின. அரையிறுதி போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதே போல் ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இரு அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன் எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory