» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்பு
திங்கள் 2, டிசம்பர் 2024 5:40:47 PM (IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5-வது இந்தியர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோ: நடுகளத்தில் மிரட்டிய சாமுவேல் முத்துசாமி!
வெள்ளி 19, ஜூன் 2026 12:00:29 PM (IST)

உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வியாழன் 18, ஜூன் 2026 11:31:58 AM (IST)

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கேப் வெர்டே!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:44:52 PM (IST)

கிரிக்கெட் மைதானத்தில் கைகலப்பு: இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய இளம் வீரர் சூர்யவன்ஷி!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:44:13 AM (IST)


