» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணி!

திங்கள் 2, டிசம்பர் 2024 5:49:38 PM (IST)



உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், தரவரிசையில் மீண்டும் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 61.11 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்திலும், 59.26 சதவீத வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இடத்திலும், 57.69 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திலும் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory