» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பார்டர் - கவாஸ்கர் டிராபியை பறிகொடுத்த இந்தியா: ஆஸி மண்ணில் 3பேருக்கு கடைசி பயணம்!!
திங்கள் 6, ஜனவரி 2025 10:02:51 AM (IST)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், பார்டர் - கவாஸ்கர் டிராபியை 3-1 என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பறிகொடுத்திருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் ஆஸ்திரேலிய சென்ற இந்திய கிரிக்கெட் அணி, இப்போது வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது. அத்துடன் இந்திய அணியில் இருக்கும் மூன்று சீனியர் பிளேயர்களுக்கு இதுவே அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணமாகவும் அமைந்திருக்கிறது. அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்த மூன்று பிளேயர்களும் இருக்க மாட்டார்கள்.
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு இந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் தான் கடைசி. இனி இந்த மூன்று பேரும் அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருக்க மாட்டார்கள். ரோகித் சர்மாவுக்கு 37 வயது, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தலா 36 வயதாகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டிக்கு ஆஸ்திரேலியா சென்று விளையாடும். அப்போதைய அணியில் இவர்கள் மூன்று பேரும் இருக்க வாய்ப்பில்லை. எனவே கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் விளையாடிய இந்த மூன்று சீனியர் பிளேயர்களும் வெறுங்கையுடன் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நடக்கப்போகிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், " இந்திய அணியில் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும். அடுத்த 5 மாதங்களுக்குள் இந்த மாற்றங்கள் இருக்கும். இப்போதயை சூழலில் அது என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என சொல்ல முடியாது. சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டி விளையாடுகிறீர்கள் என்றால் நிச்சயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது தான் நிறைய பயிற்சி கிடைக்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் இப்படி கூறியிருப்பதற்கு பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுமாறு கம்பீர் கூறினார். ஆனால், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சீனியர் பிளேயர்களை லோக்கல் கிரிக்கெட் ஆடுமாறு வற்புறுத்துவது நல்லதல்ல என கூறினார். கடைசியில் இப்போது கம்பீர் கூறியது தான் சரி என்ற நிலைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வந்திருக்கிறது. விராட் கோலி கூட இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தார்.
ஆனால் ரோகித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அவரை விட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார். எனவே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் கடுமையாக எழுந்திருக்கிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ரியாக்ஷன் என்ன? என்பது கூடிய விரைவில் தெரியவரும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து
வியாழன் 17, ஜூலை 2025 3:25:11 PM (IST)

ஜடேஜா போராட்டம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:28:42 AM (IST)

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த வாஷிங்டன் சுந்தர்..!
திங்கள் 14, ஜூலை 2025 11:55:13 AM (IST)

விம்பிள்டன் நாயகன்: ஜனநாயகன் விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் போஸ்டர் வைரல்!!
திங்கள் 14, ஜூலை 2025 11:25:38 AM (IST)

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)
