» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை 21 ரன்களில் வீழ்த்திய இந்தியா!

சனி 20, செப்டம்பர் 2025 10:32:36 AM (IST)



ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் அபு​தாபி​யில் உள்ள ஷேக் சயீத் மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - ஓமன் அணி​கள் மோதின. இந்​திய அணி​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோ​ருக்கு பதிலாக ஹர்​ஷித் ராணா, அர்​ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்​திய அணி நிர்​ண​யிக்​கப்​பட்ட 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 188 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக சஞ்சு சாம்​சன் 45 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் விளாசி​னார். அவர், 41 பந்​துகளில் அரை சதம் கடந்​திருந்​தார். சர்​வ​தேச டி20 அரங்​கில் சஞ்சு சாம்​சனுக்கு இது 3-வது அரைசத​மாக அமைந்​தது.

முன்​ன​தாக ஷுப்​மன் கில் 5 ரன்​களில் ஷா ஃபைசல் பந்​தில் போல்​டா​னார். அபிஷேக் சர்மா 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்த நிலை​யில் ராமானந்தி பந்​தில் வெளி​யேறி​னார். ஹர்​திக் பாண்​டியா ஒரு ரன் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார்.

அக்​சர் படேல் 13 பந்​துகளில் 26 ரன்​களும், திலக் வர்மா 18 பந்​துகளில் 29 ரன்​களும், ஷிவம்துபே 5 ரன்களும், அர்​ஷ்தீப் சிங் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். ஹர்​ஷித் ராணா 13 ரன்​களும், குல்​தீப் யாதவ் ஒரு ரன்​னும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இதையடுத்து 189 ரன்​கள் இலக்​குடன் ஓமன் அணி பேட் செய்தது.

அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆமீர் கலீம் 64 ரன்கள், ஹம்மாத் மிர்சா 51 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் 32 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சன் பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory