» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!

திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)



தர்மசாலா மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காஅணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டி20 போட்டி நேற்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தடுமாற தொடங்கினர்.

தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஒவ்வொருவராக அவுட்டாகி வெளியேற கேப்டன் மார்க்கரம் மட்டும் தனி ஆளாக போராடினார். அரை சதம் கடந்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தர். இந்திய பௌலர்களான வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து 60 ரன்கள் சேர்த்தனர்.
   
அதன்பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 25 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 12 ரன்கள், சிவம் தூபே 10 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory