» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜெய்ஸ்வால் - வைபவ் அதிரடி: மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
புதன் 8, ஏப்ரல் 2026 4:43:52 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது சீசனில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
கவுகாத்தியில் பெய்த கனமழை காரணமாகப் போட்டி தொடங்குவதில் சுமார் மூன்று மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணிக்குத் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 22 ரன்களை விளாசினார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய அடுத்த ஓவரில், இளம் வீரர் வைபவ் இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
வைபவ் 14 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
151 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் தொடக்கம் ஏமாற்றமாக அமைந்தது. ரோகித் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (6), ஹர்திக் பாண்ட்யா (9) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ரூதர்போர்டு மற்றும் நமன் திர் தலா 25 ரன்கள் எடுத்த போதிலும், அந்த அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
புதிய சாதனைகள்:
100 சிக்சர்கள்: ராஜஸ்தான் அணிக்காக 100 சிக்சர்களைக் கடந்த 4-ஆவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார் (சாம்சன், பட்லர், வாட்சன் ஆகியோருக்கு அடுத்தபடியாக).
அரைசதம்: ராஜஸ்தான் அணிக்காக அதிக அரைசதங்கள் (19) அடித்தவர்கள் பட்டியலில் ரகானே மற்றும் வாட்சன் ஆகியோருடன் ஜெய்ஸ்வால் 3-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதிரடி தொடக்கம்: ஐபிஎல் வரலாற்றில் முதல் 3 ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் ராஜஸ்தான் (58/0) 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)

கோவில்பட்டியில் மாநில ஆக்கிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
வெள்ளி 15, மே 2026 8:32:25 AM (IST)

நெருக்கடியான தருணங்களே என்னைச் செதுக்குகின்றன: விராட் கோலி நெகிழ்ச்சி!
வியாழன் 14, மே 2026 4:58:29 PM (IST)


