» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2026: அதிரடி ஆட்டத்தில் தடுமாறும் மும்பை - டாடீஸ் ஆர்மி உத்தி தோல்வியா?
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:58:37 PM (IST)

மாறிவரும் அதிரடி ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் திணறி வரும் நிலையில், அனுபவ வீரர்களை மட்டுமே நம்பியிருக்கும் 'டாடீஸ் ஆர்மி' உத்தி அந்த அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறியது. ஷெர்ஃபானே ரூதர்போர்ட் கடைசி நேரத்தில் 31 பந்துகளில் 9 சிக்சர்களுடன் 71 ரன்கள் விளாசவில்லை எனில், மும்பையின் தோல்வி இன்னும் மோசமானதாக இருந்திருக்கும்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் பவர் பிளே (முதல் 6 ஓவர்கள்) ரன் வேகம் சராசரியாக 10.47 ஆக உயர்ந்துள்ளது. சன் ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பவர் பிளேயில் முறையே 105 மற்றும் 93 ரன்கள் குவித்து 'ரணகளம்' செய்து வரும் நிலையில், மும்பை அணி இதில் பின்தங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இன்னமும் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா போன்ற அனுபவ வீரர்களையே (Daddies Army) நம்பியுள்ளது. ஆனால், இன்றைய ஐபிஎல் சூழலில் இளம் வீரர்களின் 'காட்டடி' தர்பாரே வெற்றியைத் தீர்மானிக்கிறது.
தவறான முடிவுகள்:
பவர் பிளே அதிரடிக்கு இஷான் கிஷன் மற்றும் அதிரடி பினிஷிங்கிற்கு டிம் டேவிட் போன்ற வீரர்களை மும்பை நிர்வாகம் கழற்றிவிட்டது பின்னடைவாகக் கருதப்படுகிறது. போலார்டுக்குப் பிறகு டிம் டேவிட் அந்த இடத்திற்குப் பொருத்தமாக இருந்தும், அவரை விடுவித்தது தவறான உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
154 ரன்களுக்கு நமன் தீர் ஆட்டமிழந்தபோது, கடைசி 4 ஓவர்களில் 86 ரன்கள் தேவை என்ற அசாத்திய நிலைக்கு மும்பை தள்ளப்பட்டது. மாறிவரும் டி20 வேகத்திற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை எனில், இந்தத் தொடரில் அந்த அணி பெரும் சரிவைச் சந்திக்கும் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி : பஞ்சாப் அணியின் பிளே-ஆப் வாய்ப்பில் சிக்கல்!
வெள்ளி 15, மே 2026 3:34:37 PM (IST)

சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? கணிப்புகளும் - வெற்றி வாய்ப்புகளும்!
வெள்ளி 15, மே 2026 12:34:40 PM (IST)

கோவில்பட்டியில் மாநில ஆக்கிப் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
வெள்ளி 15, மே 2026 8:32:25 AM (IST)

நெருக்கடியான தருணங்களே என்னைச் செதுக்குகின்றன: விராட் கோலி நெகிழ்ச்சி!
வியாழன் 14, மே 2026 4:58:29 PM (IST)


