» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அக்ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!
புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ரன்களுடனும், லியாம் டாசன் 68 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 150-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பவுலர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை பும்ரா முறியடித்தார். இந்தியத் தரப்பில் அக்ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 11 ரன்களிலும், 6 மாத இடைவெளிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிக்குத் திரும்பிய விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் (35 ரன்), கேப்டன் சுப்மன் கில் ஆகியோரது ஆட்டம் அணியை மீட்டது. சிறப்பாக விளையாடி 19-வது அரைசதம் கடந்த சுப்மன் கில் 80 ரன்கள் எடுத்திருந்த போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அக்ஷர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களுடனும், அக்ஷர் பட்டேல் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)

காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி: வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:39:11 PM (IST)

4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)


