» சினிமா » திரை விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் விமர்சனம்

சனி 10, ஏப்ரல் 2021 8:24:32 AM (IST)




செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு : அரவிந்த கிருஷ்ணா. மார்ச் 08, 05:18 

கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக அந்த ஆசிரமத்திற்காக செலவு செய்கிறார். மறுபுறம் சபல குணம் படைத்த நாயகன் எஸ்.ஜே.சூர்யா, பணக்கார பெண்ணான நந்திதாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஆண்குழந்தை இருக்கிறது.

அந்தக் குழந்தையை பார்த்துக் கொள்ள ரெஜினாவை அணுகுகிறார்கள். அதற்காக பெருந்தொகையை சம்பளமாக கொடுக்கிறேன் என சொல்கிறார்கள். அந்தப் பணம் ஆசிரமத்திற்கு உதவியாக இருக்கும் என்பதால், அதற்கு சம்மதிக்கிறார் ரெஜினா. நாளடைவில் நாயகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினா மீது ஆசை வருகிறது. அவரை அடைய முயல்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். ஹீரோயிசம், வில்லத்தனம், காமெடி என அனைத்திலும் ஸ்கோர் செய்து ஆல்ரவுண்டராக வலம் வருகிறார். அவரது முழு நடிப்பு திறமையும் இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்துள்ள நந்திதா, முதல் பாதியில் பெரிதாக ஸ்கோர் செய்யாவிட்டாலும், இரண்டாம் பாதியில் அசத்தி இருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகின்றன. மறுபுறம் ரெஜினா நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா இவர்கள் மூவரையும் திறம்பட கையாண்டுள்ளார். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அதேபோல் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் சற்று தொய்வு தெரிகிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தின் மற்றொரு ஹீரோ என்றால் அது யுவன் தான், அசத்தலான பின்னணி இசையின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாடல்களும் காட்சிகளோடு ஒன்றி பயணிக்கின்றன. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory