» சினிமா » திரை விமர்சனம்
வைபவ் நடித்துள்ள பெருசு படத்தின் திரைவிமர்சனம்
திங்கள் 17, மார்ச் 2025 12:32:12 PM (IST)

வைபவ், சுனில் இருவரும் சகோதரர்கள். இவர்களுடைய தந்தையை ஊரில் பெருசு என்று அழைக்கிறார்கள். இந்த நிலையில் வைபவ் அப்பா திடீரென மரணம் அடைகிறார். அப்பாவை இழந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த மரணத்தை வெளி உலகத்திற்கு சொல்ல முடியாமல் மொத்த குடும்பமும் தவிக்கிறது. அதற்கு காரணம் அவர்களுடைய அப்பா மரணத்தில் இருக்கும் பிரச்சினை. அந்த பிரச்சினை என்ன? அதை வைபவ் குடும்பத்தால் சமாளிக்க முடிந்ததா? இறந்தவரின் இறுதிச் சடங்கு நல்ல முறையில் நடந்ததா? என்பது மீதி கதை.
வைபவ் வெட்டி ஆபிசர் வேடத்துக்கு கச்சிதம். தனக்கு தள்ளாடும் கேரக்டர் என்றாலும் படத்தை இயல்பான நடிப்பால் தள்ளாடாமல் பார்த்துக் கொள்கிறார். மது மயக்கத்தில் இருப்பவர் எப்படி குளறுபடியாக பேசுவார், மங்கலான பார்வையோடு இருப்பார் என்பதை கண் முன் கொண்டு வந்திருப்பது அசத்தல்.
அண்ணனாக வரும் சுனில் தனது கதாபாத்திரத்தின் அழுத்தம் அறிந்து அட்டகாசமாக நடித்துள்ளார். முக்கியமான காட்சிகளில் நேர்த்தியான நடிப்பாலும், பார்வையாலும் அவர் கடந்து போகும் இடங்கள் வெகு சிறப்பு.
நாயகிகள் சாந்தினி தமிழரசன், நிஹாரிகா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் இடம் வரும்போது புகுந்து விளையாடியுள்ளனர்.
ஒன் மேன் ஆர்மியாக காமெடியில் கலக்கி இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர் கையாளும்போது தியேட்டரில் சிரிப்பலை. கருணாகரன், பால சரவணன், கஜராஜ், கார்த்திகேயன், முனீஸ்காந்த், ரமா, தீபா அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை நிறுத்தி நிதானமாக டீல் செய்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்கள். அருண்ராஜ் பின்னணி இசை கதையை கலகலப்பாக நகர்த்துகிறது.
சத்ய திலகம் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. இறந்த சடலத்தை மையமாக வைத்து ப்ளாக் காமெடி படமாக ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இயக்குனர் இளங்கோ ராம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா விமர்சனம்!
சனி 16, நவம்பர் 2024 4:14:18 PM (IST)

கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரை விமர்சனம்
செவ்வாய் 5, நவம்பர் 2024 7:51:37 PM (IST)

ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் விமர்சனம்
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:33:11 AM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் விமர்சனம்
வெள்ளி 1, நவம்பர் 2024 5:53:56 PM (IST)

ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரை விமர்சனம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 11:16:43 AM (IST)

கார்த்தி, அர்விந்த் சுவாமி நடித்துள்ள மெய்யழகன் - திரை விமர்சனம்!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 10:11:42 AM (IST)
