» சினிமா » செய்திகள்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: கமல்ஹாசன் இரங்கல்!

வியாழன் 2, நவம்பர் 2023 5:01:33 PM (IST)

நடிகர் ஜூனியர் பாலையா என்றழைக்கப்படும் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா. 1975-ஆம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, கும்கி உள்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த ஜூனியர் பாலையா, இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஜூனியர் பாலையாவின் இல்லத்தில் திரைத்துறையினர் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)


Sponsored AdsTirunelveli Business Directory