» சினிமா » செய்திகள்
சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)
சமீபத்தில் தெலுங்குத் திரைப்பட விழாவொன்றில் நடிகர் பார்த்திபன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து அவர் உருக்கமான விளக்கத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு உச்ச நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், மேடையில் பேசும்போது: "நான் ஒரு நாயுடு பையன்... சென்னையில் வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு தெரியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, "எப்போதும் சாதிக்கு எதிராகப் பேசும் பார்த்திபன், இப்போது ஏன் சாதியைக் குறிப்பிட வேண்டும்?" என நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், அதில் கூறியிருப்பதாவது: "என் பேச்சு யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில விஷயங்கள் தேவையின்றிப் பெரிய விவாதமாகி விடுகின்றன. நான் எவ்வளவு தமிழ் பற்று கொண்டிருந்தாலும், என் பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியாது. என் பிறப்பு என் பொறுப்பு அல்ல; எந்தக் குழந்தையும் இன்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று கேட்டுப் பிறப்பதில்லை."
எனக்கு சோறு, சுகம் என எல்லாவற்றையும் தந்தது தமிழ் தான். நான் எங்கு சென்றாலும் தமிழைப் பெருமையாகச் சொல்வேன். நான் தமிழுக்காகவே வாக்கப்பட்டவன். தெலுங்கு மேடையில் பேசும்போது எனக்குச் சற்று பதற்றமாக இருந்தது. திணறாமல் ஏதாவது பேச வேண்டும் என்ற வேகத்தில் அந்த வார்த்தை வந்துவிட்டது.
மேலும், அந்தத் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தனக்குப் பதிலாக வேறொருவர் டப்பிங் பேசியுள்ளதாகவும், ஆனால் அதன் தமிழ்ப் பதிப்பிற்குத் தானே குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் அந்தப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். "தமிழ் உயர்ந்த மொழி, அதில் அன்பும் கருணையும் இருக்கிறது; தயவுசெய்து இதனைப் பெரிய பிரச்சனையாக்க வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)

அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்: வைரமுத்து வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:38:50 AM (IST)

தலைவர் 173 படப்பிடிப்பு ஏப்.27-ல் தொடக்கம்: சிபி சக்கரவர்த்தி தகவல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:28:02 PM (IST)

