» சினிமா » செய்திகள்

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!

திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

DanushRayan.jpg

தான் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு எழுந்த சர்ச்சைகள் குறித்து, "தட்டிக்கொடுங்கள்; தட்டி விடாதீர்கள்" என நடிகர் தனுஷ் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' திரைப்படம் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியாகி ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிபெற்றாலும், விமர்சன ரீதியாகக் கலவையான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில், அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது 'ராயன்' படத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அதே ஆண்டில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா', 'மெய்யழகன்' ஆகிய திரைப்படங்களுக்கு விருது கிடைக்காத நிலையில், ராயன் படத்திற்குத் தேசிய விருது வழங்கப்பட்டதற்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

தன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷ், இச்சச்சை குறித்துப் பேசியதாவது: "'ராயன்' திரைப்படத்திற்குத் தேசிய விருது கிடைத்ததால் எழுந்த சர்ச்சையைக் கவனித்தேன். 'மெய்யழகன்', 'மகாராஜா' ஆகிய திரைப்படங்கள் ராயனை விடச் சிறந்த படங்கள் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், என்னுடைய 'புதுப்பேட்டை', 'ராஞ்சனா', 'மரியான்', 'வடசென்னை', 'கர்ணன்' ஆகிய திரைப்படங்களுக்குத் தேசிய விருது கிடைக்காதபோது இதுகுறித்து யாரும் ஆதங்கப்படவில்லை. இப்போது ராயனுக்குக் கிடைத்ததும் 90 சதவீதம் பேர் எதிராகக் கருத்து கூறுகின்றனர். ஆனால், அன்று 10 சதவீதம் கூட எனக்கு ஆதரவாகப் பேசவில்லை.

இம்முறை ராயன் படத்திற்குச் சூழ்நிலை அமைந்ததால் விருது கிடைத்திருக்கிறது, அவ்வளவுதான். தமிழ் சினிமா வளர தட்டிக்கொடுங்கள்; தட்டி விடாதீர்கள்." என்றார். தேசிய விருது சர்ச்சை குறித்து நடிகர் தனுஷ் பேசிய இந்த வீடியோவும் கருத்துகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory