» சினிமா » செய்திகள்

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!

சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

TamilAward.jpg

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் 2024ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகளை புது தில்லியில் வெளியிட்டுள்ளது. தேர்வுக் குழுத் தலைவர் ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் இந்த விருதுப் பட்டியலை அறிவித்தனர்.

முதன்மை விருதுகள் விபரம்:

சிறந்த நடிகர்களாக மம்முட்டி (பிரம்மயுகம்) மற்றும் கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்) ஆகியோரும், சிறந்த நடிகையாக யாமி கவுதமும் (ஆர்டிக்கிள் 370) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள்:

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த படத்தொகுப்பு (கலைவாணன்) ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் படமாகத் தேர்வாகியுள்ளது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமூக மாற்றத்திற்கான சிறந்த படம் மற்றும் தேர்வுக் குழுவின் சிறந்த நடிகர் (தனுஷ்) ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படம் தேர்வுக் குழுவின் சிறப்பு விருதையும், அதன் சவுண்ட் மிக்ஸிங்கிற்காக சுரன் ஜி விருதையும் பெற்றுள்ளனர். 'மகாராஜா' திரைப்படத்தில் நடித்த சாச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகையாகவும், அனல் அரசு சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் தேர்வாகியுள்ளனர். மேலும், 'ப்ளு' என்ற தமிழ் ஆவணப் படத்திற்காக டிஎஸ் ஹரிஹர சுதன் சிறந்த சவுண்ட் டிசைனர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory