» சினிமா » செய்திகள்

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!

சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

BussyAnandJananayagan.jpg

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும் என்று தவெக கட்சியினர் மற்றும் விஜய் ரசிகர்களை அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். 

எச். வினோத் இயக்கத்தில், விஜய் - பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்ததால், திட்டமிட்டபடி இப்படம் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. பின்னர், அவ்வழக்கை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியது. தணிக்கைச் சான்று கிடைத்ததைத் தொடர்ந்து, படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டது.

வரும் 23-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் - அமைச்சர் ஆனந்த் கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "திரையரங்குகளைச் சிறப்பாக அலங்கரித்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை ஒரு திருவிழா போல் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory