» சினிமா » செய்திகள்
பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் மாரடைப்பால் காலமானார்
சனி 11, நவம்பர் 2023 3:47:24 PM (IST)
ஐம்பது ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த பழம்பெரும் நடிகர் சந்திர மோகன் (82 வயது) மாரடைப்பால் காலமானார்.
1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் ‘நாளை நமதே’. இப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர் தெலுங்கு நடிகர் சந்திரமோகன். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.விஸ்வநாத் ஆகியோரின் உறவினரான சந்திர மோகன் 1982-ஆம் ஆண்டு வெளியான ரங்குல ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து குருஷேத்திரம், சீதாபதி சம்சாரம், ஆதித்யா 369, சங்கராபரணம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சில ஆண்டுகள் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர் மீண்டும் 2000-ஆம் ஆண்டு முதல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 7ஜி பிருந்தாவன் காலனி, தீ, சங்கராந்தி ஆகிய படங்களில் இவரது நடிப்பு பல தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சந்திரமோகன் இன்று (நவம்.11) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.