» சினிமா » செய்திகள்

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!

புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)



அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது என்று சென்னையில் நடைபெற்ற  மார்க் பட விழாவில் நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் தற்போது இயக்குனர் கார்த்திகேயா இயக்கத்தில் மார்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனா. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 25ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் கிச்சா சுதீப் படத்தின் அனுபவங்கள் குறித்து பேசினார்.அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், "மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோஷ்ணி பதிலளிக்கும் முன்பு சுதீப், "இந்த மாதிரி ஒரு கேள்வி கூட படப்பிடிப்பில் வரவில்லை. 

அதனால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது" என்று கூறி நாயகிகள் இருவரையும் மேடைக்கு மத்தியில் வரவைத்து அமரவைத்தனர்அதனை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், சார் இவ்வளவு அழகா எம்ஜிஆர் மாதிரி பேசுறீங்.. நீங்களும் விஜய் மாதிரி அடுத்த முதலவர் ஆக ஆசைப்படுறீங்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுதீப் `அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது'' என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory