» சினிமா » செய்திகள்
பிரசாந்தின் அந்தகன் பாடலை வெளியிட்ட விஜய்!
புதன் 24, ஜூலை 2024 5:56:54 PM (IST)

பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.
பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை இயக்கினார். அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்தகன் ஆந்தெம் (anthagan anthem) என்கிற இப்பாடலை உமாதேவி, ஏகாதேசி எழுத இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)
