» சினிமா » செய்திகள்

நடிகை சோபிதாவுடன்நடிகர் நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:51:14 AM (IST)



ஐதராபாத்தில் நாகார்ஜுனா இல்லத்தில் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

நடிகை சமந்தாவும் நாகார்ஜுனா மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 3 வருடங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு 2021-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன்பிறகு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. சோபிதா துலிபாலா தமிழில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனாலும் காதலை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா இல்லத்தில் நேற்று நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகார்ஜுனா தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே.சூர்யா..!

திங்கள் 2, டிசம்பர் 2024 5:11:48 PM (IST)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி..?

திங்கள் 2, டிசம்பர் 2024 5:08:54 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory