» சினிமா » செய்திகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி..?
திங்கள் 2, டிசம்பர் 2024 5:08:54 PM (IST)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்கின்ற திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படம். இணை இயக்குனராகவும், நடிகராகவும் நடித்து அசத்தியிருந்தார் மாரி செல்வராஜ். தொடர்ச்சியாக இயக்குனர் ராமோடு இணைந்து பயணித்து வந்த அவர் கடந்த 2018ம் ஆண்டு தமிழில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய கலை பயணத்தை இயக்குனராக தொடங்கினார்.
அதைத்தொடர்ந்து 'கர்ணன், மாமன்னன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான 'வாழை' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் - கார்த்தி கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மாரி செல்வராஜ ஒப்புக் கொண்டுள்ள பட பணிகளை முடித்த பிறகு இந்த பட பணிகள் ஆரம்பிக்கும் என தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடிவேலு - ஃபஹத் ஃபாசிலின் ‘மாரீசன்’ ஜூலை ரிலீஸ்
புதன் 2, ஏப்ரல் 2025 3:38:10 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் டிரெய்லர் வெளியானது
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:48:24 PM (IST)

ஜன நாயகன் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:05:58 PM (IST)

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் - வேல்முருகன்
திங்கள் 31, மார்ச் 2025 8:35:45 PM (IST)

பாெங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் - விஜய் படங்கள் மோதல்?
செவ்வாய் 25, மார்ச் 2025 3:50:05 PM (IST)

பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதா? தெலுங்கு சினிமாவுக்கு, மகளிர் ஆணையம் எச்சரிக்கை!
ஞாயிறு 23, மார்ச் 2025 9:51:12 AM (IST)
