» சினிமா » செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி தரிசனம்
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 10:03:42 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் பிரேம்ஜி நேற்று தனது மனைவி இந்துவுடன் வந்தார். கோவிலில் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதியில் தரிசனம் செய்தார்.
பின்னர் வெளியே வந்த பிரேம்ஜியுடன் கோவில் காவலர்கள், ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். காரில் ஏறுவதற்கு முன்பு மங்காத்தா சினிமா பட பாணியில் விரலை அசைத்து செய்கை காண்பித்துச் சென்றார்.