» சினிமா » செய்திகள்
தளபதி 69 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வெள்ளி 4, அக்டோபர் 2024 3:43:11 PM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 69" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் 'தி கோட்'. இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். 'தளபதி 69' படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார்.
மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும்.
இந்த படத்தில் நடிகர் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், "தளபதி 69" படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. "தளபதி 69" பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். நாளை இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்திற்கான பூஜை இன்று நடைபெற்ற வேளையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழாவையும் விஜய் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
