» சினிமா » செய்திகள்
ரஜினியுடன் ஜெயிலர் 2 : அப்டேட் கொடுத்த நெல்சன்!
சனி 26, அக்டோபர் 2024 5:31:49 PM (IST)

'ஜெயிலர் 2' தான் எனது அடுத்த படம் என்று இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள நெல்சன், கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளடி பெக்கர்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொண்ட நெல்சன், 'ஜெயிலர் 2' படம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது, ஜெயிலர் 2 படம் தான் தனது அடுத்த படம் என்று தெரிவித்துள்ளார். எனவே ரஜினி, தனது 171-வது படமான 'கூலி' திரைப்படத்தை முடித்த பின்பு நெல்சன், ரஜினி கூட்டணியில் 'ஜெயிலர் 2' திரைப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பா.விஜய் சுவாமி தரிசனம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:57:17 PM (IST)

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு நிறைவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:53:30 PM (IST)

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)
