» சினிமா » செய்திகள்

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஞாயிறு 15, டிசம்பர் 2024 8:59:16 PM (IST)



உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் 32 வயதான டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதான குகேஷ் வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 13) நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேஷுக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.11.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குகேஷுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் குகேஷை இன்று (டிச. 15) தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரின் பெற்றோர் குறித்தும் கேட்டறிந்தார். ரஜினிகாந்த் உடன் பேசிய குகேஷ், அவருக்கு நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory