» சினிமா » செய்திகள்

ஜன நாயகன் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனை!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 5:05:58 PM (IST)



விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையினைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இதில் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தாலும், இறுதியாக அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இதற்காக 120 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அனைத்து மொழி உரிமையும் இதில் அடங்கும்.

2026-ம் ஆண்டின் முதல் பெரிய படமாக இது அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு அமைத்திருக்கிறது. மேலும், இந்தி வெளியீட்டை கணக்கில் கொண்டு 8 வாரத்துக்கு பின்பே ஓடிடி வெளியீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் ‘ஜன நாயகன்’ வெளியாவது உறுதியாகி இருக்கிறது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory