» சினிமா » செய்திகள்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

சுமார் 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த படம் ‘இசை’. அதற்குப் பிறகு நடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தததால், இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியே இருந்தார். ஆனால், தனது அடுத்த படத்துக்காக பிரம்மாண்ட கார் ஒன்றை மட்டும் வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
‘கில்லர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இதன் தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படத்தினை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது.
‘கில்லர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா, "தனது கனவுப் படமான ‘கில்லர்’ மூலம் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா திரும்பி இருக்கிறார். இதற்காக கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை” என்று தெரிவித்துள்ளார். இத்துடன் ‘கில்லர்’ கேர்ள் எனக் குறிப்பிட்டு ப்ரீத்தி அஸ்ரானியின் எக்ஸ் தளத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ‘கில்லர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானியும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 13, செப்டம்பர் 2025 10:51:37 AM (IST)

லோகா திரைப்படத்தின் வெற்றி எதிரொலி : காந்தா ரிலீஸ் தேதி மாற்றம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:32:03 PM (IST)

விக்ரம் படம் டிராப்... ஃபகத் பாசிலை இயக்கும் மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார்!
புதன் 10, செப்டம்பர் 2025 12:37:31 PM (IST)

பொங்கல் ரிலீஸ் பந்தயத்தில் விஜய் உடன் மோதும் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:08:06 PM (IST)

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)
