» சினிமா » செய்திகள்
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
விஜய் நடித்த குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் ஏகப்பட்ட படங்களை தயாரித்தும், தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி மாமன்னன் வரை பல படங்களில் நடித்தும் வந்தார்.
அரசியலில் முழுமையாக களமிறங்குவதன் காரணமாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றும் முடிவு செய்தார். இந்நிலையில், தற்போது தனது மகன் இன்பன் உதயநிதியை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பாளராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சினிமாவில் அப்பா எப்படி கால் பதித்து பிரபலமாகி அதன் பின்னர் அரசியலுக்குச் சென்று துணை முதல்வராக மாறியுள்ளாரோ அதே போல இன்பன் உதயநிதியும் சினிமாவில் தற்போது பிரபலமாகி அதன் பின்னர் அரசியலிலும் நுழைவார் என்றே எதிர்பார்க்கின்றனர். தனுஷ் வேறு திடீரென ரசிகர்களை எல்லாம் சந்தித்து சாப்பாடு போட்டு வருகிறார். எதிர்காலத்தில் இன்பநிதிக்கு எதிராக தனுஷே அரசியல் களத்தில் குதித்தாலும் குதிக்கலாம் என்கின்றனர்.
மேலும், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், ரெட் ஜெயண்ட் தயாரிப்பாளர் இன்பன் உதயநிதி என அறிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் தனுஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இன்பன் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இன்பநிதியை அந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாற்றப் போவதாகவும் கடந்த வாரம் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இட்லி கடை படத்தின் அறிவிப்பிலேயே இன்பன் உதயநிதியை தயாரிப்பாளராக அறிவித்துள்ள நிலையில், அந்த படம் டிராப்பா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கூலி படத்தை ரஜினிகாந்த் எதிர்பார்த்தது போல லோகேஷ் கனகராஜ் கொடுக்கவில்லை என்றும் ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய அவருக்கு தற்போது மனமில்லை என தகவல்கள் கசிந்துள்ளன. அதன் காரணமாகவே தனுஷ் படத்தின் மூலம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இன்பன் உதயநிதி ஏற்றுக்கொண்டார் என்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் இணையும் ரஜினி - சுந்தர்.சி காம்போ: கமல்ஹாசன் அறிவிப்பு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:17:28 AM (IST)

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

