» சினிமா » செய்திகள்
லோகா திரைப்படத்தின் வெற்றி எதிரொலி : காந்தா ரிலீஸ் தேதி மாற்றம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:32:03 PM (IST)

லோகா திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவதால், நடிகர் துல்கர் சல்மான் நடித்த காந்தா திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளார். தற்போது, இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், காந்தா படத்தில் துல்கர் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது. தயாரிப்பு நிறுவனமும் காந்தாவை செப். 12 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "அன்பும் மதிப்பும் மிக்க ரசிகர்களே... எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதிலிருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம்.
எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம். மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவை வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம்.
இதற்காக, காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் இணையும் ரஜினி - சுந்தர்.சி காம்போ: கமல்ஹாசன் அறிவிப்பு!
வியாழன் 6, நவம்பர் 2025 10:17:28 AM (IST)

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் டப்பிங்: நடிகர் சாய்குமார் சாதனை!!
புதன் 5, நவம்பர் 2025 3:55:00 PM (IST)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

