» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சனி 13, செப்டம்பர் 2025 10:51:37 AM (IST)

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.14ல் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா, ராணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 

1960-களில் நடக்கும் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை, டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2026 ஜன.14-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. ஜன.9-ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory