» சினிமா » செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: விஜய் சேதுபதி, சாய் பல்லவிக்கு விருது!

வெள்ளி 20, டிசம்பர் 2024 10:33:07 AM (IST)



சென்னை​யில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழா​வில் சிறந்த நடிகர் விருது விஜய்​சேதுப​திக்​கும், சிறந்த நடிகைக்கான விருது சாய்​ பல்லவிக்​கும் வழங்​கப்​பட்​டது.

இந்திய திரைப்பட திறனாய்​வு கழகம் சார்​பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்​கியது. இதில் 60 நாடு​களில் இருந்து 180 படங்கள் திரை​யிடப்​பட்டன. திரைப்பட விழா​வின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்​கில் நேற்று மாலை நடைபெற்​றது.

இதில், திரைப்பட இயக்​குநர் பாக்​யராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்​நாடு திரைப்பட தயாரிப்​பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, திரைப்பட இயக்​குநர் சங்கத் தலைவர் ஆர்.​வி.உதயகு​மார் ஆகியோர் கலந்​து​கொண்டு, தேர்வு செய்​யப்​பட்ட கலைஞர்​களுக்கு விருது வழங்​கினர்.

சிறந்த திரைப்​படங்கள் பிரி​வில் முதல் பரிசை ‘அமரன்’, இரண்​டாவது பரிசை ‘லப்பர் பந்து’ படங்கள் பெற்றன. சிறந்த நடிகர் விஜய் சேதுபதி (மகாராஜா), சிறந்த நடிகை சாய்​பல்லவி (அமரன்), சிறந்த ஒளிப்​ப​திவு சி.எச்​.சாய்​ (அமரன்), சிறந்த படத் தொகுப்பு பிலோமின் ராஜ் (மகாராஜா), சிறந்த குழந்தை நட்சத்​திரம் பொன்​வேல் (வாழை), சிறந்த பொழுதுப்​போக்கு படம் வேட்​டையன், அமிதாப்​பச்சன் யூத் ஐகான் விருது நடிகர் அருள்​நிதி, சிறந்த இசையமைப்​பாளர் ஜி.வி.பிர​காஷ் குமார் (அமரன்) உள்ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​டிருந்​தனர்.

அதேபோல, சிறப்பு நடுவர் விருது ‘ஜமா’ படத்​துக்கு வழங்​கப்​பட்​டது. குறும்​படங்​களுக்கான பிரி​வில் சிறந்த திரைப்​படமாக கயமை தேர்வு செய்​யப்​பட்​டிருந்​தது. இந்நிகழ்​வில், இந்திய திரைப்பட திறனாய்வு கழகத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கஸ்​வாமி, பொதுச் செயலாளர் ஏவிஎம்​.கே.சண்​முகம், இணைச் செயலா​ளர் சுரேஷ் மேனன், நடிகர் அர​விந்த்​சாமி, இயக்​குநர்​கள் பா.ரஞ்​சித், ​மாரி செல்​வ​ராஜ், நடிகைகள் துஷாரா ​விஜயன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory