» சினிமா » செய்திகள்
நூறு படங்களில் இசைப்பணி: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி
வெள்ளி 20, டிசம்பர் 2024 8:18:40 PM (IST)

சுதா கொங்கரா இயக்கும் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100-வது படம் என்ற எண்ணிக்கையை தொட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
இதுகுறித்து நெகிழ்ச்சியோடு ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். ரஜினிகாந்த், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், பிரபாஸ், ரவி தேஜா, சித்தார்த், கார்த்தி, ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராம் பொத்தினேனி, அதர்வா, ராகவா லாரன்ஸ், அருண் விஜய், பரத், பசுபதி என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றேன்.
இந்த படங்களை இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி. அமரன் படத்தின் பாடல் மற்றும் இசையை கேட்டு கமல்ஹாசன் பாராட்டியது உற்சாகமூட்டியது.
இப்போது சுதா கொங்கரா இயக்கும் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100-வது படம் என்ற எண்ணிக்கையை தொட்டு இருக்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும் நடிப்பதிலும் பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 13, செப்டம்பர் 2025 10:51:37 AM (IST)

லோகா திரைப்படத்தின் வெற்றி எதிரொலி : காந்தா ரிலீஸ் தேதி மாற்றம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:32:03 PM (IST)

விக்ரம் படம் டிராப்... ஃபகத் பாசிலை இயக்கும் மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார்!
புதன் 10, செப்டம்பர் 2025 12:37:31 PM (IST)

பொங்கல் ரிலீஸ் பந்தயத்தில் விஜய் உடன் மோதும் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:08:06 PM (IST)

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)
