» சினிமா » செய்திகள்

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த நடிகர் செந்தில் : சைபர் கிரைம் போலீசில் புகார்

திங்கள் 24, பிப்ரவரி 2025 9:34:31 PM (IST)



ஆன்லைன் மோசடியில் ரூ.15 ஆயிரம் இழந்து விட்டதாக சின்னத்திரை நடிகர் செந்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடர் மூலம் பிரபலமானவர் செந்தில். தொடர்ந்து பல தொடர்களில் நடித்து பிரபல நடிகராக இருந்து வருகிறார். ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் நடித்த போது அவருடன் இணைந்து நடித்த ஸ்ரீஜாவுடன் காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நட்சத்திர தம்பதிகளுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மோசடியில் ஏமாந்து, ரூ.15 ஆயிரம் இழந்து விட்டதாக சமூக வலைதளத்தில் செந்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஏமாற்றப்பட்டதை வீடியோவாக வெளியிட்டார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு தெரிந்த தொழில் அதிபரான நண்பர் ஒருவர் வாட்ஸ்அப் நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. அவர் எனக்கு பெரும்பாலும் மெசேஜ் பண்ணமாட்டார். அதில் ரூ.15 ஆயிரம் கேட்டிருந்தார். நான் டிரைவிங்கில் இருந்ததால் கேட்ட பணத்தை அனுப்பி விட்டேன். ஆனால் அதன் பிறகு பெயரை பார்த்தால் வேறு ஒரு நபர் பெயர் இருந்தது.

அதற்குள் எனது பணம் பறிபோய் விட்டது. இதையடுத்து அவரிடம் போன் மூலம் கேட்ட போது, அவர் தனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு விட்டது என கூறினார். என்னிடம் மட்டுமல்ல இது போன்று 500 பேரிடம் பணத்தை ஏமாற்றியுள்ளார். இது பற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் என கூறியுள்ளார்.

ஆன்லைன் மோசடி பற்றி மத்திய, மாநில அரசுகள் மற்றும் போலீசார் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள் என்பது போல பிரபல நடிகரே பணத்தை பறி கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory