» சினிமா » செய்திகள்

கூலி படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த்!

திங்கள் 24, பிப்ரவரி 2025 9:45:03 PM (IST)



லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்துள்ளது.

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

தங்க கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் கேங்ஸ்டர் படமான கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே சென்னை, விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை, தாய்லாந்து போன்ற இடங்களில் நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியாக எண்ணூர் துறைமுகத்தில் தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கி வருகிறார்.

படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்துவிட்டது. தொடர்ந்து 10 நாட்கள் அங்கு ஷுட்டிங் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கோகுலம் ஸ்டுடியோவில் ஒரு சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் உடனுக்குடன் எடிட்டிங் செய்யப்பட்டு வருவதால், இறுதிக்கட்ட பணிகளுக்கு 2 மாதம் இருந்தால் போதும் என்பதால், அனேகமாக கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாத இறுதியில் இந்த படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் டீசருடன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory